இங்கிலாந்தில் இலண்டன் ஸ்ரீ மகாலட்சமி திருக்கோவில்

பெருமான் : ஸ்ரீ சகஸ்ரலிங்கேஸ்வரர்
நாள் : 11.06.2016
இடம் : 272 ஹை ஸ்ட்ரீட் நார்த், (High Street North), இலண்டன் E12 6SA

temp01இலண்டன் ஸ்ரீ மகாலட்சுமி திருத்தலம் இங்கிலாந்தில் இலண்டனின் ஈஸ்ட்காம் என்னும் இடத்தில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். ஈஸ்ட்காமில் முருகன் திருத்தலமும் அமைந்துள்ளது. இலண்டன் ஸ்ரீ மகாலட்சுமி திருத்தலம் சரவண பவன் ஹோட்டல் அருகில் சற்று நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. சிற்றுந்தில் செல்பவர்கள் திருத்தலம் அமைந்துள்ள தெருவிலோ அல்லது அருகாமையில் அமைந்துள்ள சாலையிலோ விட்டுச் செல்ல வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் உண்டு. சில குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் வாகனங்கள் இலவசமாக நிறுத்துவதற்கும் அனுமதி உள்ளது. இத்திருத்தலம் இலட்சுமி நாராயணர் ட்ரஸ்டால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

கொடி மரத்துடன் கூடிய இத்திருத்தலத்தில் temp02முக்கிய மூலஸ்தானத்தில் அருள்மிகு மகாலட்சுமி சமேத அருள்மிகு இலட்சுமி நாராயணர் அருள்பாலிக்கின்றார். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சத்திய நாரயணர் பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு பூஜையை சிறப்பிப்பதை நாம் இங்கு காணலாம். இத்தலத்தில் அருள்மிகு தெய்வம்வெங்கடேசப் பெருமாளும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சகிதம் இருந்து பக்தர்களை அருள்பாலிப்பதனைக் கண்டு வணங்கிடலாம்.

முக்கிய மூலவர் சன்னதிக்குச் சற்று முன்பாக வலப்புறத்தில் அமைந்துள்ள அருள்மிகு தெய்வம் ஸ்ரீசகஸ்ரலிங்கேஸ்வரர் ஆகும். இவருக்கு முன்னால் நந்தியம் பெருமாளை கண்டு வணங்கிடலாம். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை தோறும், ருத்திர ஹோமமும்,சிறப்பு அபிசேகமும் பொதுவாக அனைத்து பக்தர்களுக்காக காலை 06.00 மணியளவில் நடத்தப்படுகின்றன.

temp03திருத்தலத்தில் நுழைந்ததும் ஆரம்பத்தில் பக்தா;களுக்கு அருள்பாலிப்பது இடப்புறம் அமைந்தள்ள அருள்மிகு தெய்வம் வினாயகர் ஆகும். இவர் இராஜ மகாகணபதி என்ற நாமத்துடன் பக்தர்களை அருள்பாலிக்கின்றார். இவருக்கு சங்கடஹரசதுர்த்தி, சுக்ல சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இத்தலத்தில் அருள்பாலிக்கும் உற்சவ வினாயகர் அருள்மிகு வல்லப கணபதி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.
வினாயகரை அடுத்து நாம் வணங்க இருக்கும் அருள்மிகு தெய்வம் முருகன்.

இத்தலத்தில் முருகன் அறுபடை வீடு சகிதம் அமைந்திருப்பது இலண்டனின் தனிச் சிறப்பு என்று கூறலாம். தமிழ்நாடு சென்று அறுபடை வீடு திருத்தலஙகளுக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோர் இத்தலத்தில் ஒரே இடத்தில் அறுபடை வீட்டின் முருகனின் திருவருளைப் பெற்றிடலாம்.

temp04 இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அறுபடை வீட்டுடன் சிவனும் சக்தியும் இங்கு இணைந்து அருள்பாலிப்பதை நாம் காணலாம். அறுபடை முருகனுக்கு ஒவ்வொரு இரண்டாம் ஞாயிறு அன்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இதற்கு அடுத்து அமைந்திருப்பது அருள்மிக காய்த்திரி சன்னதி. காய்த்திரி தேவியுடன் துர்கா தேவியையும் இங்கு தரிசிக்கலாம். காய்த்திரி தேவிக்கு ஒவ்வொரு மூன்றாம் ஞாயிறு தோறும் காலை 10.00 மணியளவில் சிறப்பு பூஜையும், செவ்வாய் கிழமை மாலை 17.30 மணியளவில் அபிசேகமும் நடைபெறுகின்றன.
அடுத்து அருள்மிகு தெய்வம் சுதர்சனரை வழிபடலாம். இவருக்குப் பின்புறம் யோகநரசிம்மா; அருள்பாலிக்கின்றார். 16 ஆயதங்கள் 16 கைகளுடன் சுதர்சனர் காட்சி நல்குகிறார். இவரை வணங்குவதற்கு உகந்த நாள் புதன் சனி ஆகும்.

temp05பக்தர்கள் தங்களை காக்கும் பொருட்டும், தங்களது எதிலீஜீகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், அபிசேகம், சுதர்சனம் ஹோமம் செய்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது. அடுத்து நாம் வணங்க இருக்கும் அருள்மிகு தெய்வம் ஹனுமான். இதற்கு அடுத்து வல்லபகணபதியும் உமாமகேஸ்வரரும் அருள்பாலிப்பதைக் கண்டு வணங்கிடலாம். இத்தலத்தில் திருப்பதியில் இருந்து தருவிக்கப்பட்ட வெங்காடசலபதி திரு உருவச் சிலை இதற்கு அடுத்து அமைந்தள்ளது. இறுதியாக நாம் வணங்க இருக்கும் தெய்வம் சனீஸ்வரர் ஆகும். இவருக்கு ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அபிசேகம் நடைபெறுகின்றது. பக்தர்கள் விளக்கேற்றி செல்வதும் உண்டு.

இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 08.00 முதல் 13.00 மணி வரை. மாலை 17.00 முதல் 21.00 மணி வரை. நாளுக்கு ஏற்றா; போல் நேரங்களில் மாறுதல்களும் உண்டு. இத்திருத்தலத்தின் மகாகும்பாபிசேகம் (சம்புரோஸ்ணம்) 10.07.2016 அன்று நடைபெறுதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது குறித்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். தலத்தின் இட வசதியினை முன்னிட்டு புதிய திருத்தலம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து சற்று நடந்து செல்லும் தூரத்தில் 241,ஹை ஸ்ட்ரீட் நார்த் இலண்டன், என்னும் இடத்தில் அமைந்தள்ளது. மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண் 0208 552 5082. கையகப்பேசி எண் 07827 279 573.

 

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965

 

 

invit01 invit02