தமிழ் காலண்டர், பன்னிரு திருமுறை மன்றம் வெளியீடு

பன்னிரு திருமுறை மன்றம் சார்பில் தமிழ் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இக்காலண்டரில் தமிழ் எண்களுடன் தேதிகள் குறிப்பிட்டு, தமிழ் எண்களுக்கான குறியீடுகளையும் அந்தந்தப் பக்கத்திலேயே தந்திருக்கிறார்கள்.

மேலும் தமிழ் சொல்லின் தனிச்சிறப்பை விளக்கும் வகையில்
தமிழ்ச் சொற்களின் வழக்கில் உள்ள வார்த்தைக்கான சரியான தமிழ் சொல்லையும், உறவு முறைகளையும் பற்றி தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு :

தந்தையை உணர்த்தும் சொல் : அத்தன்.
அத்தனுடைய மனைவி : ஆத்தாள்
அத்தனுடைய உடன் பிறந்தவள் : அத்தை.

இதுபோன்று அனைத்து உறவுகளுக்கும் தமிழ் சொற்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதோடு மட்டுமில்லாமல் அறுபத்திமூன்று நாயன்மார்களின் படங்களுடன் அவர்களின் பெயர்களுடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் அச்சிட்டிருக்கிறார்கள். பன்னிரு திருமுறை மன்ற, தமிழ் காலண்டரை பெற அணுகவும்.

பன்னிரு திருமுறை மன்றம். 103, ஜெயராம் நகர், 4வது குறுக்குத் தெரு, குளத்தூர், சென்னை – 600 099. தொலைபேசி : 9941461078, 9841150800, 9884645788, 9884948032

calendar