ராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. 16 பக்க அழைப்பிதழ் சிறப்பாக நடந்ததற்கான அத்தாட்சி 10-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள். மக்கள் கூட்டம் அம்மன் மேல் மக்களுக்கு இருக்கும் பக்திக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. முன்னாள் பாரத பிரதமர் திரு. தேவகவுடா அவர்கள் குடும்பத்துடன் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். திருச்சி சாமிகள் அருள் ஆசி வழங்கி விழாவை இனிதே நடத்தி வைத்தார்கள். தினந்தோறும் ஆதீனங்கள் வருகை புரிந்து மக்களுக்கு ஆசி வழங்கினார்கள்.