பாம்பன் ஸ்வாமி ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஸ்ரீ மயூர வாகன சேவன விழா

பாம்பன் ஸ்வாமி ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11-வது வார்டில் 11ம் நம்பர் படுக்கையில் 27-12-1923 அன்று சேர்க்கப்பட்டு, அறுவைசிகிச்சை செய்து குணம் செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குகப்பெருமான் திருவருளால் 11ம் நாள்  இரவு (6-1-1924) வளர்பிறை பிரதமை திதியும் பூராட நட்சத்திரம் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில்வாகனர் காட்சி கண்டு அறுவை சிகிச்சை இல்லாமலேயே பூரண குணம் பெற்றார். அந்நாளை ஸ்ரீ மயூர வாகன சேவன விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
சுவாமிகள் இருந்த அரசு பொது மருத்துவமனையின் புகைப்படங்கள் இங்கே வழங்கப்பட்டிருக்கின்றன.