ஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் விழா 2016

posted in: விழாக்கள் | 0

awrad-social-scientist awrad-social-scientist-janakiraman

2016 அக்டோபர் 2ம் தேதி அன்று (காந்தி ஜெயந்தி) அன்று சென்னை மைலாப்பூர் டி.ஏ.ஜி.பி.எஸ். தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் ஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் திரு.ஜானகிராமன் அவர்களுக்கு அழகப்பச் செட்டியார் பல்கலைக்கழக பேராசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களால் முன்மொழியப்பட்ட ‘SOCIAL SCIENTIST” என்ற பட்டத்தை மாண்புமிகு நீதியரசர் பொன்.பாஸ்கரன் அவர்கள் வழங்கி, கௌரவித்தார்.

விழாவின் போது நடிகர், கலை இயக்குநர் கலைமாமணி டாக்டர்.ஜி.கே., தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் திரு.டி.எஸ்.ஆர். சுபாஷ், திரு.கொண்டல்தாசன், (தலைவர், தமிழ்நாடு காமராஜ் சிவாஜி பேரவை) மற்றும் சின்னத்திரை புகழ் குணச்சித்திர நாயகன் திரு.என்.ராமச்சந்திரன், திரைப்பட பூஜை நாயகன் திரு.வி.மங்களநாத குருக்கள் (சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்) முன்னிலையில் வகித்து கௌரவித்தனர்.

ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி வசந்த் டி.வி. செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.