அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், திருபட்டீஸ்வரம்,கும்பகோணம்

174-வது கும்பாபிஷேகம்

கும்பகோணம் திருபட்டீஸ்வரம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்

பெருமான் : தேனிபுரீஸ்வரர்
அம்பாள் : ஞானாம்பிகை
இடம் : பட்டீஸ்வரம், பின்கோடு-2445237

தரிசன நாள் : 13.11.2011 மற்றும் 29.01.2016 (கும்பாபிசேகம் நாள்)

IMG_0995இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலும், தாராசுரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்தின் அருகில் உள்ள இரயில் நிலையம் தாரசுரம் ஆகும். சோழமன்னன் ஆட்சிக்குட்பட்ட பழையாறை என்ற ஊர் அன்றைய காலகட்டத்தில் ஒரு தலைநகரமாக இருந்துள்ளது. பழையாறை என்ற ஊரில் இத்தலம் அமைந்திருந்தாலும், இத்தலம் இருக்கும் இப்பகுதி பட்டீஸ்வரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வருகின்றது.

இத்திருத்தலத்தைச் சுற்றி 4 பெரிய வீதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். 5 கோபுரங்களையும், 3 பிரகாரங்களையும் கொண்ட இத்தலத்தின் நீளம் 650 அடி. அகலம் 295 அடியாகும். இத்தலத்திற்கு மிக அருகில் உள்ள திருசக்திமுற்றம் சக்திவனவேஸ்வரர் திருத்தலத்திற்கும், பட்டீஸ்வரம் திருத்தலத்திற்கும் இடையில் ஒரு வீதி தான் உள்ளது. திருஞான சம்பந்தா; திருசக்திமுற்றத்திலிருந்து பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு வரும் போது, வெயில் அதிகமாக இருந்ததால், இறைவனே பூதகணங்களை கொண்டு முத்துப் பந்தல் அமைத்து, வெயிலின் தாக்கத்தை நீக்கியுள்ளர். இங்கு ஆனி மாதம் நடைபெறும் முத்துப்பந்தல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. திருஞானசம்பந்தர் வரும் போது, இறைவனே அவரை நேரில் காணும் பொருட்டு, தன் பார்வைக்கு மறைத்த வண்ணம் இருந்து நந்தியினை விலகி இருக்கும் படி பணித்துள்ளார்.

எனவே இத்தலத்தில் இன்றும் நந்திகள் தனது இருப்பிடம் மாறி சற்று விலகி இருப்பதனை நாம் காணலாம். இத்தலம் மார்கண்டேயர் முனிவரால் வழிபட்ட தலம் என்ற சிறப்பினை உடையது. விஷ்வாமித்திரர் பிரம்மமகரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான். இவருக்கு காய்த்திரி அருள் இத்தலத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது.

எம்பெருமான் தேனிபுரீஸ்வரர் முதல் பிரகாரத்தில் உள்ள மைய மண்டபத்தில் உள்ள சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றார். தலத்தின் உட்பகுதியில் சப்த மாதாக்கள் மகாலட்சுமி,ரேணுகா அம்பாள், நவகிரகம், சூரியன் சந்திரன் பைரவர், ஆகியவர்களை வழிபடுவதற்கு மூர்த்திகள் உள்ளன. இத்தலத்தில் அருள்மிகு கணேசர் அனுக்கை பிள்ளையார் மாதவாண பிள்ளையார் சுவர்ணகை வினாயகர் என்ற மூன்று வித வெவ்வேறு பெயர்களுடன் கூடிய கோலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்திருப்பதை நாம் காணலாம்.

முதல் பிரகாரத்தின் வடபகுதியில் அம்பாள் ஞானாம்பிகை தனியொரு கோவிலில் தனி சன்னதியுடன் இருந்து அருள்பாலிக்கின்றாள். அம்பாள் சன்னதியின் முன் மண்டபத்தில் பாணலிங்கம் ஒன்று உள்ளது. இத்தலத்தின் அம்பாள் சோம கமலாம்பிகை மற்றும் பல்வலைநாயகி என்று மறுபெயர்களால் அழைக்கப்படுகின்றாள். இங்குள்ள மண்டபத்தில் ஓவியங்கள் மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளன. முத்துப்பந்தல் ஓவியம் எங்களை மிகவும் கவர்ந்தது என்ற கூறலாம். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம் இது. காவிரித் தென்கரையில் அமைந்த தேவாரதிருத்தலங்களில் இது 23வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் தனி சன்னதியுடன் காட்சியளிப்பதை நாம் காணலாம். மேலும் ஆடிபூரஅம்மன், உற்சவர், நடராஜபெருமான், தபசு அம்மன், ஆகியோரைத் தனிதனி சன்னதிகளில் வழிபடலாம்.

நடராஜர் சபையை நோக்கும் போது, பார்ப்பதற்கு சபைக்குரிய தனி தோற்றத்தில் எழில் கொண்டு விளங்குகின்றது. பள்ளி அறையுடன் கூடிய இத்தலத்தில் தனியொரு வளாகத்தில் வேதலிங்கம், பைரவர், சனிஸ்வரர், சூரியன், கீர்த்தி வாசகன் ஆகியவர்களுக்கு மூர்த்திகள் இருப்பதனைக் காணலாம். பிரகாரத்தில் அமைந்துள்ள பைரவர் தனி சன்னதியில் நந்தியுடன் அருள்பாலிப்பதனைக் கண்டு வணங்கிடலாம்.

ஞான தீர்த்தத்தை தீர்த்தமாகக் கொண்ட இத்தலம் சுமார் 1000-2000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று தலவரலாறு மூலம் அறிய முடிகின்றது. இத்தலத்தில் இராமர் தீர்த்தம் ஆஞ்சநேயர் தீர்த்தம் போன்ற தீர்தங்கள் அருகில் உள்ளன. திருத்தலத்தின் அருகிலேயே தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. இராமன் வாலியினைக் கொன்ற பாவம் தீர இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். இராம பிரான் ஸ்தாபித்த லிங்கம் இன்றும் இங்கு வழிபாட்டில் உள்ளது. இத்தலத்தின் தலமரம் வன்னி மரமாகும். காமதேனு என்ற பசுவின் கன்று ‘பட்டி‘ என்ற பெயரினைக் கொண்டது. இக்கன்று இங்குள்ள இறைவனை வணங்கியதால், இவ்வூர் ‘பட்டீஸ்வரம்’; என்று அழைக்கப்படுகின்றது என்று செய்தி குறிப்புகள் கூறுகின்றன.

IMG_1030இத்தலத்தில் தனியொரு கோவிலில் துர்கா தேவியை கண்டு வணங்கிடலாம். துர்கை சாந்த சொருபியாகக் இங்கு காட்சியளிப்பது வேறு எந்த தலத்திலும் காணாத ஒன்றாகும். இவள் தனது சிம்ம வாகனத்தில் உட்கார்ந்த நிலையில் மகிஷாசுரன் தலையில் தனது கால்களை வைத்த வண்ணம் காட்சியளிக்கின்றாள். காதில் அணிகலன்களுடன் எட்டு கைகள், மூன்று கண்களுடன் காட்சி தருகின்றாள். இத்தலத்தில் துர்கா தேவியின் அருகில் அமர்ந்துள்ள சிம்மம் இடப்புறத்தில் அமைந்துள்ளது வேறு எங்கும் காண முடியாத ஒரு சிறப்புச் செய்தியாகும். இத்தலத்தில் துர்கா தேவியைக் கேட்காமல் சோழமன்னர்கள் எந்த வித முக்கிய முடிவுகளும் எடுப்பதில்லை என்பதனை செய்தி குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. நோய் துன்பம், பகை அனைத்தும் துர்கையை வணங்கிவிட நீங்கும். இங்குள்ள துர்கை பக்தர்களை கைவிட மாட்டாள். முழுநம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்கள் எதை எண்ணுகின்றனரோ அது நிச்சயம் நடைபெறும் என்பது உறுதி.

இத்தகைய சிறப்புகள் பெற்ற இத்தலத்தின் கும்பாபிசேகம் 29.01.2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. நண்பர்கள் சகிதம் இத்தலத்திற்கு சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த எம்பெருமானுக்கு எங்களது நன்றியினை இத்தருணத்தில் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். கும்பாபிசேகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 06.00 முதல் 11.00 மணி வரை. மாலை 16.00 முதல் 20.30 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 91 4352416976ல் தொடா;பு கொள்ளலாம்.

ponrajச.பொன்ராஜ்,

7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *