ஜெ.ஜானகிராமன் அவர்கள் 5-12-1945 அன்று கடலூர் தாலுக்காவில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் பிறந்தார். தகப்பனார் ஜெயராமன் (விவசாயி) தாயார் தனலெக்ஷ்மி அம்மாள். உடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரிகள், மற்றும் மூத்த சகோதரர்கள். கிராமத்தில் 5ம் வகுப்பு வரை படித்து, சென்னையில் பத்தாம் வகுப்பு (1963ம் ஆண்டு தேர்ச்சி பெற்றபின், அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்திய தேசத்தின் ஆகாய விமானப்படையில் (Indian Airforce) ரேடியோ டெலிபோன் ஆபரேட்டராக சேர்ந்து 15 ஆண்டுகள் பணிபுரிந்து 1978ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின் வியாபாரத்தில் ஈடுபட்டு, கடுமையாக உழைத்து முன்னேரினார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு இதுவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார். இன்றைய தேதியில் 125 திருக்கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக தரிசனம் செய்திருக்கிறார். அக்கோயில்களின் தான் மட்டும் தரிசனம் செய்ததோடு நிற்கக் கூடாது, உலகில்லோர் எல்லாம் அந்தக் காட்சிகளைக் கண்டு பயன்பெறும் வண்ணம், அவைகளின் புகைப்படங்களை சேகரித்து இந்த இணைய தளம் மூலம் வழங்கி பெரும்பணி ஆற்றி வருகிறார். தங்கள் ஊரில் நடைபெறும் கும்பாபிஷேகங்களைப் பற்றித் தகவல் கொடுத்தால், தங்கள் ஊர்களுக்கே நேரிடையாக வந்து புகைப்படங்கள் எடுத்து இந்த இணைய தளத்தில் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். அதுபோல இதுவரை நடைபெற்ற திருக்கோயில்கள¤ன் கும்பாபிஷேகக் காட்சிகளை தாங்கள் படமெடுத்து வைத்திருந்தால், அவைகளையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அந்தக் காட்சிகளும் தங்கள் ஊர் கோயில் விவரங்களுடன் இந்த இணையதளத்தில் இடம் பெறும். இதுவரை தரிசித்த திருக்கோயில்களும், தரிசித்த கும்பாபிஷேக் காட்சிகளும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
திரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :