216வது கும்பாபிஷேகம்
கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில்
கும்பாபிசேகம் 02.02.2017
மன்னர் கங்கைகொண்டசோழன் முதல் மூன்றாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழமன்னர்களுக்கு தலைநகரமாக விளங்கிய பெருமையினைக் கொண்டது கங்கை கொண்ட சோழபுரம்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் மன்னர் இராஜேந்திரசோழனால் பிரகதீஸ்வரர் திருக்கோவில் கட்டப்பட்டது.
தஞ்சைபிரகதீஸ்வரர் திருக்கோவிலை கட்டிய இராஜேந்திரசோழனின் மைந்தரே இராஜேந்திரசோழர்.
உடையார் பாளையத்திற்கு கிழக்கே 16 கி.மீ. தூரத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடபகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலபரப்பில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் பெருவுடையாரும், அம்பாள் பொஜீயநாயகியும் அருள்பாலிக்கும் இத்தலத்தின் தலமரம் வன்னிமரமாகும். தலத்தின் தீர்த்தம் சிங்கமுககிணறு. எம்பெருமான் பிரகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.
எம்பெருமானின் சன்னதி 15 அடிநீளம், 6 அடிஅகலம், 11 அடிஉயரம் கொண்டது. கருவறை தரைமட்டத்திற்கு மேல் 20 அடிஉயரத்தில் அமைந்துள்ளது. அடித்தளம் சமசதுரத்துடன் விமானம் 6 அடுக்குகளுடன் 160 அடிஉயரம் கொண்டது. விமானகவசம் 7 அடிஉயரம் கொண்டது. ஆவுடையார் பீடம் மிகவும் பெரியது. பாணமும் பெரியதாக விளங்குகின்றது. எவ்வளவு கொடுமையான வெயில் காலக் கட்டத்திலும் கருவறையின் மேல் மண்டபத்தில் குளிர்சாதன அறையில் இருப்பதுபோன்ற உணர்வினை பக்தர்கள் உணராலம் என்பது திண்ணம். நமது முன்னோர்களின் கட்டடிடக் கலையின் தொழிற் நுட்பத்திற்கு இது ஒருசான்றாகதிகழ்கின்றதுஎன்று கூறினால் அது மிகையாகாது. பாதுகாப்பு காரணமாக மேல் மண்டபம் செல்வதற்குதற்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சன்னதியின் வாயிலில் போகசக்தி அம்மன் அருள்பாலிக்கின்றாள். மகாமண்டபத்தில் ஆறுமுகபெருமானைவணங்கிடலாம். சிற்ப திறமைக்கு சான்றாக விளங்கும் நவகிரகம் பீடம் பக்தர்களை மிகவும் கவர்கின்றது.
கருவறையின் தெற்குசுவரில் நர்த்தனவினாயகர், அர்த்தநாலீஜீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சங்கரநாராயணன் நடராஜர் திருவுருவங்களை கண்டு வணங்கிச் செல்லலாம். மேற்கு சுவரில் இலிங்கோத்பவர், திருமால், கார்த்திகேயன், உமாமகேஸ்வரர் ஆகிய அருள்மிகு தெய்வங்களுக்கும், வடக்குச் சுவரில் காலசம்ஹார மூர்த்தி, விஸ்ணு, துர்க்கை பிரம்மாகாலபைரவர் ஆகிய அருள்மிகு தெய்வங்களுக்கும் மூர்த்திகள் உள்ளன. இது போன்று துவார படிக்கட்டுகளின் தெற்கே பிச்சாடனரும், கஜலெட்சுமியும் அருள்பாலிக்கின்றனர். வடக்கேசண்டேசானுகிர மூர்தியும் ஞானசரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். திருத்தலத்தின் பிரகாரத்தில் சண்டேசுரரும், மகிஸாமர்தனியையும் கண்டு வணங்கிடலாம்.
இத்தலத்தின் பெருமான் மீதுகருவூர் தேவர் பதிகம் பாடியருளியுள்ளார். ஜெயங்கொண்டார், ஒட்டக் கூத்தர், சேக்கிழார் ஆகியபுலவர்கள் வாழ்ந்த பெருமையினை கொண்டது. குலோத்துங்கன், சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணத்தை தில்லையில் பாடச் செய்து, நாள்தோறும் எவ்வளவு பாடல்கள் நிறைவேறின என ஆள் இட்டு கேட்டறிந்ததாக வரலாற்றுச் செய்தி மூலம் அறிய முடிந்தது. இத்தலத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றுவருகின்றது. சிவராத்திரி, திருவாதிரை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்தின் கும்பாபிசேகம் 1932 ஆம் நடைபெற்றதாக செய்திகுறிப்புகள் மூலம் அறியமுடிந்தது. 85 ஆண்டுகளுக்குபின் 02.02.2017 அன்றுநடை பெற்ற கும்பாபிசேகத்திற்கு எனது அலுவலக நண்பர்கள் திரு.தாணுலிங்கம், முருகன், மணியன், குணசேகரன் ஆகியோர் சகிதம் செல்வதற்கு வாய்ப்பு கொடுத்த எம்பெருமானுக்கு நன்றியினைத் இத்தருணத்தில் பதியவைக்கிறேன்.
கும்பாபிசேத்தை முன்னிட்டு உத்திரகண்ட் மாநிலம் லீஜீஸிகேசம் புண்ணியநதியாம் கங்கையிலிருந்து 108 குடங்களில் புனிதநீர்; ஏற்கெனவே எடுத்து வரப்பட்டுள்ளது. தஞசை மாவட்டம் திருலோகி என்னும் இடத்தில் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலின் குறிப்புகள் கொண்ட இடத்திலில் இப்புனிதநீர் வைக்கப்பட்டு, 27.01.2017 அன்று ஊர்வலமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தடைந்துள்ளது.
8 காலபூஜைகள் நடைபெற்றுள்ளது. கும்பாபிசேகம் தினத்தன்றுகாலை 08.30 மணயளவில் மேளதாளங்கள் முழங்ககடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. 09.30 மணியளவில் கோபுரங்களில் வைக்கபட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார் புனிதநீரை ஊற்றபக்தர்கள் பரவசத்துடன்
‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’
என்று இறைவனை போற்றி, விண்ணினையே அதிரவைத்தனர்.
வாழ்கவளமுடன்………..
7/497 ‘டி’ பிரிவு, சிட்கோநகர்
வில்லிவாக்கம் சென்னை-600 049.
Phone : 9962040695
ponpuni2002@gmail.com
Leave a Reply