175-வது கும்பாபிஷேகம்
கீழப்பழையாறை வடதளி அருள்மிகு சோமநாதர் சுவாமி திருக்கோவில்
பெருமான் : சோமநாதர் சுவாமி
அம்பாள் : சோமகமலாம்பிகை
இடம் : கீழப்பழையாறை,பட்டீஸ்வரம் அஞ்சல் பின்கோடு-612703
தஞ்சாவூர் மாவட்டம்
தரிசன நாள் : 13.11.2011, மற்றும் 29.01.2016 (கும்பாபிசேகம் நாள்)
‘ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே’ – திருநாவுக்கரசர் திருமுறை-5
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்பட்டீச்சுரம். திருசத்திமுற்றம் ஆகிய ஊர்களுக்கு அருகில் சுமார் 2 கி.மீ தூரத்தில் முழையூர் அமைந்துள்ளது. பட்டீஸ்வரம்,முழையூர் பழையாறை, ஆகிய ஊர்கள் பழையாறை சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அருள்மிகு விமலநாயகி அம்பாள் சமேத அருள்பாலிக்கம் எம்பெருமான் தர்மபுரீஸ்வரர் முழையூர் திருத்தலத்தின் மூலவராக விளங்குகின்றார். 13.11.2011 அன்று இத்தலத்தின் கும்பாபிசேகம் நடைபெற்ற போது மெய்யன்பர்கள் சகிதம் இத்தலத்திற்குச் சென்று வர வாய்ப்பு கிட்டியது. 29.01.2016 அன்று பட்டீஸ்வரம்,கீழப்பழையாறை,திருக்கருகாவூர் திருத்தலங்களின் கும்பாபிசேகம் நடைபெற்ற போது மீண்டும் இத்தலத்திற்குச் செல்வதற்கு அருள்பாலித்த இறைவனின் கருணையே காரணம் என்றும் கூறலாம்.
முழையூர் தலம் அறநிலையத்துறைக்கு உட்பட்டு இயங்குகின்றது. இது ஒரு மாடக்கோவில் அமைப்பாகத் திகழ்கின்றது. இத்தலத்தின் முன்வாசலில் தர்மபுலீறிஸ்வரர் திருக்கோவில்- வள்ளலார் கோவில், முழையூர் என்ற பெயர் பொறித்த பலகையினைக் காணலாம். பொதுவாக இதனை முழையூர் சிவாலயம் என்று குறிப்பிடுகின்றனர். இத்தலத்திற்கு எதிர் வாஜீசையில் சுமார் 100 அடி தூரத்தில் சிவபிரகாச சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. இங்கு உ.வே.சாமிநாத அய்யர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றோர் கல்வி பயின்றுள்ளனர் என்பதனை அறியும் பொருட்டு. இவர்கள் ‘கல்வி பயின்ற இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது கண்டு பெரிதும் மகிழந்தேன்.
முழையூரிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது கீழப்பழையாறை என்ற ஊராகும். பழையாறை என்று வழங்கப்படுகின்ற பகுதியில் அமைந்துள்ள ஊர் தான்; கீழப்பழையாறையாகும். இவ்வூர் ‘நந்திபுரம்’ ‘முடி கொண்ட சோழபுரம்’; என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது என்று செய்தி குறிப்புகள் மூலம் அறிய முடிந்தது. இவ்வூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயானார்,மற்றும் மங்கையர்கரசியார் போன்றோர் பிறந்துள்ளனர் என்பது ஒரு சிறப்புச் செய்தியாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்பினை பெற்றுள்ளது. தெற்கு காவிரிக்கரையில் அமைந்துள்ள தேவாரத் திருத்தலங்களில் இது 24வது தலமாகத் திகழ்கின்றது. சமணர்கள் பாழியாக மாற்றப்பட்ட சிவன் கோவிலை, உண்ணா நோன்பிருந்து, திருநாவுக்கரசர் மீட்டதாக செய்தி குறிப்புகள் மூலம் அறிய முடிந்தது. இத்தலத்தின் தீர்த்தம் சோம தீர்த்தம் மற்றும் ஜடாயு தீர்த்தமாகும்.
தலத்தில் நுழையும் போது இரண்டு வினாயர்களை நாம் கண்டு வணங்கிடலாம். கைலாசநாதர் திரு உருவம் தனியொரு சன்னதியில் உள்ளதைக் கண்டு வணங்கிடலாம். மேலும் மூலவர் எம்பெருமான் முன் வாயிலில் வினாயகர் திரு உருவம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை முருகன் தனி சன்னதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர். மதுரகாளியம்மனின் திரு உருவம் மிகப் பெரிய அளவில் இருப்பதனைக் காணலாம். இதே மண்டபத்தி;ல் சூரியன் சந்திரன் நால்வர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடைநீக்கம் பெறவும் நோய்வாய்பட்டவர்கள் அதிலிருந்து மீளவும் இத்தலத்திற்கு வருகை தந்து இறைவனை வழிபட்டு வேண்டிய பலன்களை பெற்றுச் செல்கின்றனர்.
பிரகாரத்தில் அருள்மிகு வினாயகர், தட்சிணாமூர்த்தி,பிரம்மா, சண்டிகேஸ்வரர், வீரதுர்கை, ஆகியோர்களை வணங்குவதோடு, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆகிய அருள்மிகு தெய்வங்களை தனியொரு சன்னதியில் வழிபடலாம். இத்திருத்தலம் இரதம் போன்ற அமைப்பினைக் கொண்டு விளங்குகின்றது. சோழர்களின் சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று கூறினால் அது மிகையாகாது. இத்திருத்தலம் பற்றியும் பழையாறை பற்றியும் பொன்னியின் செல்வன் என்ற நூலில் விலீஜீவாக விளக்கங்கள் கூறப்பட்டிருப்பதை நாம் காணலாம். விஷ்ணுவின் வாகனமாகிய கருடனும்,ஆதிசேசனும் இத்தலத்தில் வழிபட்டதாக தலவரலாறு மூலம் அறிய முடிகின்றது. இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 06.00 முதல் 11.00 மணி வரை. மாலை 16.00 முதல் 20.30 வரை. மேலும் விவரங்களுக்கு கையகப்பேசி எண் 91 9894569543 ல் தொடர்பு கொள்ளவும்;.
7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; 58வது தெரு, வில்லிவாக்கம் சென்னை-600 049
ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965