வெட்டவெளியில் வெளிப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர்

திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி சமேத தடுத்தாளீஸ்வரர் எழுந்தருளி ஆட்சிபுரிவது அனைவரும் அறிந்ததே. இந்த ஆலயத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்யாணக்குப்பம் என்ற கிராமத்தில் குமார் என்ற வாலிபரின் மனையில் வெளிப்பட்ட பிரம்மாண்ட சிவலிங்கம் ஒன்று சைவ அன்பர்கள் அனைவரையும் ஈர்த்து, அருள்புரிந்து வருகிறது.

இந்த மனைக்கு சொந்தக்காரரான குமார் கூறுவது இதோ, “நானு எப்பவும், நாராயணனத்தான்  கும்புடுவேன். இப்ப என்னான்னா என் மனையில இந்த ஈஸ்வரர் கிடைச்சி என் கருத்து, நினைவு, கனவு எல்லாத்துலேயும் அவருதான் இருக்கிறாரு. ஆமா சார்.. ராவுல படுத்தேன்னா, நடராஜரா வர்றாரு.. லிங்கமா வர்றாரு. உடுக்கச் சத்தம் என் காதுல கேக்குது. என்னமோ இவருக்கு ஒரு கோயில் கட்டிட்டேன்னா நல்லாருக்குங்க.”

கள்ளம் கபடமன்ற இந்த மனிதனின் ஏக்கம் ந¦ங்க, ஊக்கம் பிறக்க, நமது கும்பாபிஷேகம்.காம் குழுவினர் பாம்பன் ஸ்வாமிகள் மாத இதழ் நிருபர்களுடன் கல்யாணகுப்பம் கிராமத்திற்கு விரைந்தோம்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அன்பர்களின் பார்வைக்கும், கனிவுக்கும் நன்கொடைக்கும் அளிக்கப்படுகிறது.