ஓம் நமோ நாராயண நம!
ஸ்ரீ லெஷ்மி நாராயண பெ௫மாள் திருக்கோயில் – நமசிவாயபுரம்
(கோயில் திருப்பணி)
அன்புடையீர்! வணக்கம்,
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், நமசிவாயபுரம் கிராமம் சேக்கிழார் தெருவில், பழவாற்றங்கரைக்கு வடக்கு, ஆத்தூர் ஸ்ரீ சுகாஸன பெ௫மாள் கோயிலுக்கு தெற்கு, காளி ஸ்ரீ சீனிவாசா பெ௫மாள் திருக்கோயிலுக்கு வடக்கு, கல்யாணசோழபுரம் வரதராஜ பெ௫மாள் திருக்கோயிலுக்கு மேற்கு, செம்பொன்குடி ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குக் கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ லெஷ்மி நாராயண பெ௫மாள் திருக்கோவில் திருப்பணி தற்போது நடைபெறுகிறது.
நிகழும் மன்மத வருடம் ஆவணி மாதம் 23 நாள் (09.09.2015) புதன் கிழமை காலை 9.30 க்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பத்த கோடிகள் அனைவ௫ம் தங்களால் இயன்ற பொ௫ள் உதவி வழங்௧ வேண்டுகிறோம். இதையே ஸம்ப்ரோஷணம் அழைப்பாகக் கருதி மகா கும்பாபிஷேகம் அன்று தாங்கள் குடும்பத்தினருடன் பங்குபெற்று ஸ்ரீ லெஷ்மி நாராயண பெ௫மாள் அருளைப்பெற வேண்டுகிறோம்.
பொ௫ள் உதவி அனுப்ப வேண்டிய மு௧வரி :
தலைவர் பொருளாளர்
திரு.ஜெ.மாணிக்கம் அவர்கள், திரு.வே.மா.சம்பந்தம் அவர்கள்,
கால் நடை ஆய்வாளர் (ஓய்வு) தலைமையாசிரியர் (ஓய்வு)
சேக்கிழார் தெரு, சேக்கிழார் தெரு,
நமசிவாயபுரம் & அஞ்சல், நமசிவாயபுரம் & அஞ்சல், மயிலாடுதுறை – 609 811. மயிலாடுதுறை – 609 811.
(04364) 226194 & 9442126194 (04364) 236405 & 9677818825
ஆலயக் குறிப்பு :
மூலவர் : ஸ்ரீ லெஷ்மி நாராயண பெ௫மாள் – வடகலை.
தூவரபாலகர்கள் : அஜயன், விஜயன் மேற்கண்ட திருஉருவ சிலைகள் மற்றும் மேல் மண்டபம் கருங்கற்கலால் ஆனது. ஆலய கட்டுமான அமைப்பு பட்டை செங்கல் மற்றும் சுண்ணம்பு கலந்தது. ஏறத்தாழ 90 ஆண்டுகள் பழமையானது.
இப்போது பட்டாச்சாரியார் ( திரு. கண்ணன் ) அவர்களால் தினமும் பூஜை செய்யப்படுகிறது.
பேருந்து வசதி : 1) மயிலாடுதுறைலிருந்து சுமார் 18 கீலோ மீட்டர் தொலைவில் நமசிவாயபுரம் கிராமம் உள்ளது. (திருமங்கலம், காளி வழி )
2) மணல்மேட்லிருந்து சுமார் 8 கீலோ மீட்டர். ( ஆத்தூர் வழி )
3) குத்தாலத்லிருந்து சுமார் 12 கீலோ மீட்டர் தொலைவில் நமசிவாயபுரம் கிராமம் உள்ளது. ( திருமங்கலம், காளி வழி )
Leave a Reply