ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்

225-வது கும்பாபிஷேகம்

pic001
pic002குமராட்சி யை அடுத்த தெம்மூர் சாவடிக்கரை ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குமராட்சி யை அடுத்த தெம்மூர் சாவடிக்கரை ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ஸ்ரீகணபதி ஹோமம் , நவகரஹ ஹோமம் , பாலிகை பூஜை, காப்பு கட்டுதல், கலச பூஜை, அஷ்டோத்தர அர்ச்சனை, தீபாராதனை, மாலை முதல் கால யாக பூஜையில் விசேஷ திரவிய ஹோமம்,பூர்ணாஹுதி , தீபாராதனை நடைபெற்று இன்று காலை இரண்டாம் கால
யாக பூஜையில் விசேஷ திரவிய ஹோமம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி நடைபெற்று தம்பதி பூஜை, கோ பூஜை நடைபெற்று கலசங்கள் புறப்பட்டு ஆலய விமானம், மற்றும் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் பரிவாரங்களுக்கும், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.

இதற்கான பூஜைகளை சிதம்பரம் வெங்கடேச தீக்ஷிதர் தலைமையில் ஊராட்சிமன்ற தலைவர் திரு கோபால கிருஷணன் முன்னிலையில் கிராம மக்கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *