219வது கும்பாபிஷேகம்
அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை
நாள் : 6-02-2017 அன்று 9. மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.
திருவேற்காடு அருள்மிகுவேதபுரீஸ்வர் திருக்கோவில் கும்பாபிசேகம்
கும்பாபிசேகம் நாள் : 06.02.2017
பெருமான் : வேதபுரீஸ்வரர்
அம்பாள் : பாலாம்பிகைஅம்பாள்
இடம் :திருவேற்காடு, சென்னை-600 077.
திருவேற்காட்டில் அமைந்துள்ள வேதபுரீஸ்வர் திருக்கோவிலின் மகாகும்பாபிசேகம் 06.02.2017 அன்றுகாலை 09.00 மணிமுதல் 10.30 மணிவரைதவத்திரு ஐயப்பசுவாமிகள் தலைமையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு 06.02.2017 அன்று யாகசாலை மிகசிறப்பானமுறையில் நடைபெற்றது. அவ்வமயம் தவத்திரு ஐயப்பசுவாமிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையும் வகித்தார். யாகசாலை நிகழ்ச்சிக்கு எனது குடும்பத்துடன் திருக்கோவிலுக்கு சென்று வர வாய்ப்பளித்த எம்பெருமானுக்கு முதற்கண்
நன்றியினை பதிவு செய்கிறேன்.
மகாகும்பாபிசேகத்தன்று 5001 நபர்களுக்கு அறுசுவை அன்னதானம் நடைபெறும் என்ற செய்தியை கேள்விப்பட்ட போது, ‘அன்னம் பாலிக்கும் அருள் பாலிக்கும் என்றசொற்றொடர் அடியேனின் நினைவுக்கு வந்தது.
மேலும் அன்றுமாலை 18.00 மணியளவில் ஸ்வாமி திருக்கல்யாணவைபவத்தில் கலந்துகொள்ளும் 2501 சுமங்கலிகளுக்கு இலவசமாக திருமாங்கல்யம் மற்றும் புடவை வழங்கப்படவிருக்கின்றது. மகாகும்பாபிசேகம் நடைபெறும் இத்தருணத்தில் இத்திருத்தலம் பற்றிய குறிப்புகளை இனி நாம் காண்போம்.
இத்திருக்கோவிலுக்கு திருவேற்காடு பேருந்துநிலையத்திலிருந்து ஆட்டோவில் செல்வது உசிதமாகும். பேரூந்து வழித்தட எண் 27ஊ,29,49பு,50,59,170. இத்திருத்தலம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலிருந்து சுமார் 1 கல் தொலைவில் காடுவெட்டியாறு என்று கூறப்படுகின்ற பழைய பாலாற்றங்கரையில் உள்ளது.
சூரசம்ஹாரத்தின் பிறகு, முருகப்பெருமான் திருவேற்காட்டிற்கு வந்ததாகதலபுராணம் கூறுவதாகவும், முருகப் பெருமான் வேலால் உண்டாக்கியதீலீ;த்தமே வேலாயுததீலீ;த்தம் என்றும், வேதம் வழிபட்டதலம் இதுவென்றும்., நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று இறைவனை வழிபட்டதால் இத்தலம் வேல்காடு என்றும் பின் வேற்காடு என்றுமாறி திருசேர்த்ததால் அது திருவேற்காடு என்றாயிற்று என்றும், ஞானசேரி வெளியீடு-22 ல் பக்கம் 222 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம், 2000 ஆண்டு பழமை வாய்ந்ததலமாகத் திகழ்கின்றது. சிவலிங்கத் திருமேனி கருவறையில் இருந்தாலும், எம்பெருமானும் அம்பாளும் திருமணக்கோலத்தில் கருவறையில் இருப்பது தனி சிறப்பு.
எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக் காட்சிகொடுத்த தலங்களில் இதுவும் ஒன்றாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்கநாயனார் அவதரித்த திருத்தலம் இதுவாகும். அவர் இத்தலத்தில் தங்கி பாடல்கள் இயற்றியுள்ளார்.. மூர்க்கநாயனாரை தரிசித்து வழிபட இங்கு அவருக்கு தனியொரு சன்னதி உள்ளது. அருணகிரிநாதரும் இத்தலத்தில் தங்கிபாடல்கள் இயற்றி உள்ளார். அருணகிரிநாதாரின் திருஉருவத்தையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.
இத்தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி சாந்தி செய்து, திருக்கடவூருக்கு நிகரான பலனை இங்கு பக்தர்கள் பெற்று வருகின்றனர். இத்தலத்தின் மண்ணைத் தொட்டவர்கள் ஈரேழுஉலகிலும் முக்கிய பேறு நிச்சயம் பெறுவார்கள் என்பது இந்தமண்ணின் மகத்துவம் என்று கூறப்படுகின்றது.
துவாரபாலகர்கள் மிக கம்பிராமாக எம்பெருமான் சன்னதிக்கு முன்பாக காட்சியளிக்கின்றனர். இத்தலத்தில் நவகிரகம் வட்டவடிவஅமைப்பில் உள்ளது. இத்தலத்தில் சன்னதி வினாயகர் என்று தனி சன்னதி ஒன்றும் உள்ளது. பாலசுப்பிரமணியர், சிவலிங்கம் சன்னதியும் தனியாக உள்ளது. எம்பெருமான் காசிவிஸ்வநாதர் விசாலாட்சிக்கு என்று தனியாகவும் சன்னதி இங்கு அமைந்துள்ளது. அனபாயசோழர், சேக்கிழார், ,நால்வர், வரசித்திவினாயகர், நாகராஜர், பாலவினாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்காதேவி பைரவர், சந்திரன், சூரியன், 63நாயன்மார்கள் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வழிபட இத்திருத்தலத்தில் ஆகமவிதிபடி மூர்த்திகளை பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளன. சனிபகவானுக்கு தனி சன்னதி வெளிபிரகாரத்தில் இருக்கின்றது.
இத்திருத்தலத்தின் முன்பு அமைந்துள்ள தெப்பக்குளம் நன்கு புதுபிக்கப்பட்டுள்ளது. நூதான இராஜகோபுர குடமுழுக்கு விழா 24.06.1993 அன்றுநடைபெற்றதாகவும், இத்தலத்தின் மகாகும்பாபிசேகம் 23.06.1999 அன்றுநடை பெற்றதாகவும் அறங்காவலர் குழுத்தலைவர் மூர்த்தி என்றும் கல்வெட்டுச் செய்திமூலம் அறியமுடிந்தது.
இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் காலை 0500 முதல் இரவு 2100 மணிவரை. மதிய வேலையில் திருக்கோவிலின் திருக்கதவு திறந்தே இருக்கும் என்பது பக்தர்களுக்குஒரு நற்செய்தியாகும். ஓதுவார் முருகையாதேசிகர் அவர்கள் கோவிலின் தலப்பெருமைகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் தகவல் விரும்புவோர் அவரை அணுககையகப் பேசிஎண் 9092853460 தொடர்பு கொள்ளலாம். இத்திருத்தலம் தேவிகருமாரியம்மன் கோவில், திருவேற்காடுக்கு உட்பட்டதாகும்.
வேதபுரீஸ்வரருக்கு அரணாக எட்டுத் திக்குகளிலும் சுமார் 18 கி;மீ; சுற்றளவில் எட்டுலிங்கள் எட்டுக் கோவில்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்டு இருக்கின்றன. மெ;ய்யன்பர்கள் இந்த எட்டுக் கோவில்களுக்கும் சென்று, இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம் குபேரலிங்கம், ஈசானலிங்கம் ஆகியவற்றை அவசியம் தரிசிக்கவேண்டும்.
வாழ்கவளமுடன்………..
7/497 ‘டி’ பிரிவு, சிட்கோநகர்
வில்லிவாக்கம் சென்னை-600 049.
Phone : 9962040695
ponpuni2002@gmail.com