கும்பாபிஷேகத்தின் அவசியம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, மக்களுக்கு நல்லாசி வழங்கி, வேண்டும் வரமெல்லாம் தந்து வரப்பிரசாதியாய் விளங்குவார் என்பது சான்றோர் வாக்கு.
ஆனால், இன்றோ பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க எத்தனையோ ஆலயங்கள் சிதிலமடைந்து, கேட்பாரற்றுக் கிடக்கிறது… இப்படிப்பட்ட கோயில்களை சேர்ந்த சொத்துக்களோ ஏராளம்.. ஆனால், அவைகளை அனுபவித்துக் கொண்டு, காலத்தில் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி, வாடகை பாக்கி பட்டியல்களை கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது.
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். ஆண்டவன் சொத்துதானே… யார் கேட்பார்கள்… கேட்பவர்கள் வாயை ஏதோ இட்டு அடைத்துவிட்டு, ஏமாற்றும் சராசரி ஜன்மங்களின் வீட்டில் நிச்சயம் கூன் குருடாகவும், சேன் செவிடாகவும், சிந்தை கலங்கியவர்களாகவும் பிள்ளைகள் பிறப்பது நிச்சயம். அகால மரணங்கள் நிகழ்வதும் கண்கூடு.
இருந்தாலும் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராக இருக்கும் நல்ல உள்ளங்களும் மகேசன் தொண்டே மாபெரும் தொண்டென உறுதி பூண்டிருப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆகவே, உங்கள் ஊர்களில் உள்ள சிதிலமடைந்த கோயில்களை அடையாளம் கண்டு அனுப்பி வையுங்கள். அவைகளுக்கும் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் செய்ய எத்தனையோ நல்ல உள்ளங்கள் காத்திருக்கின்றன. அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டுவோம்.. அவைகளுக்கும் கும்பாபிஷேகம் செய்வோம்..
எல்லாம் அவன் செயல்.. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
இந்த இணைய தளத்தில் காட்டப்படும் அனைத்து கும்பாபிஷேகங்களும் உலகோரை சென்றடைய பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக வளைதளங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஆக, கும்பாபிஷேகம் நடந்த கோயில்களைப் பற்றியும், நடைபெற வேண்டிய அவசியம் பற்றியும் நடைபெற வேண்டிய அவலநிலையில் உள்ள கோயில்களைப் பற்றியும் தொடர்ந்து உலகுக்கு பறைசாற்றுவோம்.சிதிலமடைந்த கோயில்களை அடையாளம் கண்டு அனுப்பி வையுங்கள். அவைகளுக்கும் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் செய்ய எத்தனையோ நல்ல உள்ளங்கள் காத்திருக்கின்றன. அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டுவோம்.. அவைகளுக்கும் கும்பாபிஷேகம் செய்வோம்..
எல்லாம் அவன் செயல்.. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
இந்த இணைய தளத்தில் காட்டப்படும் அனைத்து கும்பாபிஷேகங்களும் உலகோரை சென்றடைய பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக வளைதளங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஆக, கும்பாபிஷேகம் நடந்த கோயில்களைப் பற்றியும், நடைபெற வேண்டிய அவசியம் பற்றியும் நடைபெற வேண்டிய அவலநிலையில் உள்ள கோயில்களைப் பற்றியும் தொடர்ந்து உலகுக்கு பறைசாற்றுவோம்.