Arulmigu santhanaayagi samedha arulmigu vengeeswarar thirukovil Kumbabishekam – part 2

114th TEMPLE KUMBABISHEGAM

Arulmigu santhanaayagi samedha arulmigu vengeeswarar thirukovil Kumbabishekam on 23-1=2015. Please see the invitation for details.

அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோவில்

முனிவர் ஒருவர் சிவன் மேல் அளவு கடந்த பக்தியும் பற்றும் கொண்டிருந்தார்.இவர் வண்டு தீண்டு முன்னர் மலர் பறித்து இறைவனை பூஜிக்க விரும்பி, பொழுது விடியும் முன்னரே மரங்களில் ஏறி வண்டுகள் பூக்களைத் தீண்டுவதற்க்கு முன்னரே, தேனுடன் கூடிய பூக்களைப் பறித்து இறைவனுக்கு சூட்டி மகிழ்ந்தார். இவரது பக்தியைப் போற்றும் வகையில், அவர் பூஜை விருப்பம் நிறைவேற அவர் எளிதாக மரம் ஏற அவருடைய கால்களைப் புலிக்கால்களாக மாற்றித் தந்து இனி அனைவராலும் நீ “வியாக்ரபாதர்” என்று அழைக்கப்படுவாய் எனக் கூறி மறைந்தார் இறைவன்.
வேங்கைக் (புலி) கால் முனிவர் வழிபட்ட ஈசனாததால், மூலவர் வேங்கீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனங்களைக் காண விரும்பி ஆதிசேஷன், அத்திரி முனிவர் அநசூயைக்கு மகனாக அவதரித்தார். அத்திரி முனிவரும் ஆதிசேஷனே மகனாகப் பிறந்ததர்க்காக மகிழ்ந்து அவருக்கு பதஞ்சலி என பெயரிட்டார். பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் சேர்ந்து ஈசனை வழிபட்ட தலம்தான் இந்த வேங்கீச்சரம். ஈஸ்வரனுடைய விமானம் கஜபிருஷ்ட விமானமாகக் கட்டப்பட்டு தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. இறைவி சாந்த ஸ்வரூபினி அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி அம்மன்.
இத்திருக்கோவிலில் உள்ள பைரவர் சன்னதி ப்ரதர்ஷனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அடிக்கடி விபத்துக்குள்ளாகுபவர்கள், வீட்டில் ப்ரச்சனைகள் பல கொண்டுள்ளவர்கள், இந்த பைரவருக்கு நீராஞ்சனம் (தேங்காயில் நெய் விளக்கு) ஏற்றி வழிபட்டால், விபத்து நேருவது குறைகிறதாம், மேலும் வீட்டிலுள்ள ப்ரச்சனைகளும் குறைந்து அமைதி நிலவுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

” வேண்டும் வரமருளுகிறார் வேங்கீஸ்வரர் ”

சீராரும் சதுர் மறையும் தில்லைவாழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற
ஏராரும் மணிமன்று கொடுத்த திருவடி போற்றி

10001

10002

10003

10004

10005

10006

10007

10008

10009