CHIDAMBARAM NATARAJAR KOVIL KUMBABISHEKAM MANDALA POOJAI VIZHA

தில்லை நடராஜருக்கு கடந்த மே 1 ம் தேதி மிக விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 04-05-2015 முதல் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜையில் ஒன்பது குண்டங்களிலும் ( நவ குண்டங்கள் – ஈசான ,தத்புருஷ, அகோர, வாமதேவ , சத்யோஜாத, சிகா, சிரசு , ஹ்ருதயம், கவசம் ) தீக்ஷிதர்கள் எட்டு ரித்விக் ஆச்சரியகளாக அமர்ந்து தின பூஜைகாரர் பிரதானமாக அமர்ந்து விக்னேஸ்வர பூஜை , மஹா சங்கல்பம் ,புண்யாஹ வாசனம், கலச பூஜை ஸ்ரீ நடராஜர், சிவகாமி ஆவாஹனம் , ஸ்ரீ ருத்ர த்ரிசதி அர்ச்சனை, தீபாராதனை, பூர்வாங்க ஹோமங்கள், விசேஷ திரவிய ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், ஜயாதிஹோமம், பூர்ணாஹுதி மகா தீபாராதனை, கடம் புறப்பட்டு, ஸ்ரீ சந்திர மௌலிஸ்வரர், அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்படது . தினமும் மாலை3 மணிக்கு தொடங்குகிறது சாயரக்ஷை காலத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 48 தினங்கள் நடைபெறும். அதற்கான ஏறபாட்டை பொது தீக்ஷிதர்கள் செய்திருக்கின்றனர்.