KAVICO GNANASELVAN’S 75th BIRTHDAY ON 07-12-2014 at VANI MAHAL For details refer the Invitation
கவிக்கோ ஞானசெல்வன் அகவை 75 நிறைவு மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா
பவள விழா
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (7-12-2014) நடைபெற்ற தமிழறிஞர் கவிக்கோ ஞானசெல்வன் அவர்களின் பவள விழா (அகவை 75 நிறைவு) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திரு.இல.கணேசன் அவர்கள் தலைமையில் திரு.ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் திரு.அமுதா பாலகிருஷ்ணன் மற்றும் பல தமிழறிஞர்கள் (அழைப்பிதழில் காண்க) ஏற்பாடு செய்து, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திரு.அவ்வை நடராஜன், எழுத்தாளர் லேனா தமிழ்வானன், நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், செல்லப்பன், U.S.S.R. நடராஜன் மற்றும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு திரு.ஞானசெல்வன் மற்றும் அவரது மனைவி அறிவுக்கொடி அவர்களை வாழ்த்தியும், ஆசியும் பெற்றும் மகிழ்ந்தார்கள்.