KUMBAKONAM GARUDA SEVA

posted in: விழாக்கள் | 0

கும்பகோணம்: அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 வது திதியான அட்சய திருதியை 07.05.2019 தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு டி.எஸ்.ஆர். பெரியதெருவில் அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 12 பெருமாள் கோயிலின் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதன்படி அட்சய திருதி நாளான 7.05.2019 இன்று நேரம் :காலை 9.00 Am முதல்12.30 வரை கும்பகோணம் டி.எஸ்.ஆர் பெரிய தெருவில் உள்ள அலங்கார பந்தலில் கருடசேவை நடைபெற்றும். இதை முன்னிட்டு 1.சாரங்கபாணி சுவாமி,2.சக்கரபாணி சுவாமி,3. ராமசுவாமி, 4.ஆதிவராக சுவாமி,5. ராஜகோபால சுவாமி,6. பாட்சாரியார் தெரு கிருஷ்ண சுவாமி,7. வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராம சுவாமி,8. சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராம சுவாமி,9. மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி, 10.புளியஞ்சேரி வேணுகோபால் சுவாமி, 11. கொட்டையூர் நவநீத கிருஷ்ண சுவாமி,12. ப்ரம்மன்கோயில் வேதநாராயனன் வரதராஜன் ,13.
தோப்பு தெரு ராஜகோபாலன்,14. மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி,15. அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்கார ஸேவையில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளிய 12 கருட சேவை வழக்கமாக
இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழச்சியும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *