SRIMATH OUSHADHA LALITHA MAHA TIRUPURASUNDARI SRICHAKRARAJASABAI VASANTHA NAVARATHRI VIZHA

posted in: விழாக்கள் | 0

SRIMATH OUSHADHA LALITHA MAHA TIRUPURASUNDARI SRICHAKRARAJASABAI VASANTHA NAVARATHRI VIZHA, SEMBAKKAM.

திருப்போரூர், செம்பாக்கம் ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை ஆலயத்தின் தனிச்சிறப்புகள்.
🍀இத்தலத்தில் லலிதாம்பிகை தேவியின் அங்க உபாங்க தேவியருடன் எழுந்தருளியுள்ள சமஸ்தானம்.🍀
🍀இத்தலத்தில் வருடத்திற்கு நான்கு நவராத்திரி விழாக்கள் நடைபெறும் லலிதா ஆலயம்.🍀

🍀ஆடி மாதம் லலிதையின் சேனாதிபதியான ஸ்ரீ வாராகிக்கு வாராகி நவராத்திரி. புரட்டாசி மாதம் லலிதையின் மகளான பட்டத்து இளவரசியான ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு சாரதா நவராத்திரியும். தை மாதம் லலிதாம்பிகையின் ராஜ்ய பாரம் முழுவதும் தாங்கும் ஸ்ரீ ராஜ மாதங்கி தேவியின் மாதங்கி நவராத்திரியும். பங்குனி மாதம் வசந்த காலத்தில் லலிதா மஹா திரிபுரசுந்தரி மகா நவராத்திரியும் நடைபெறும் லலிதா ராஜதர்பார் ஆலயம்🍀 🍀இத்தலத்தில் மூலவராக பாலா திரிபுரசுந்தரி சிற்ப ஆகம முறைப்படி மூலவர் திருமேனியாக காஞ்சி மகா சுவாமிகள் அருளிய ஸ்ரீ சக்கர யந்திர பிரதிஷ்டையுடன் திருமூலரின் திரிபுரை யந்திர பிரதிக்ஷ்டையான ஸ்ரீ சக்ர பாலாலயம்.🍀
🍀ஔஷத லலிதா ஆலயம் ஸ்ரீவித்யா தந்திரம் முறைப்படி எழுந்தருளச் செய்யப் பட்டுள்ள தேவியர்களும், காமேஸ்வர காமேஸ்வரி என தனி மூர்த்தமும் அங்குச பாச தேவியர்கள் உற்சவ திருமேனியாக உள்ள ஆலயம். இங்கு மிகப்பெரிய நவராத்திரியாக பங்குனி மாத லலிதா நவராத்திரி பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக நவாவரண மகாயாகம், காமேஸ்வர் லலிதாம்பிகை திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பாலாவிற்கு தாலாட்டு உற்சவம் , ராமநவமி மாலை ஸ்ரீ பாலா, வாராஹி ,மாதங்கி, சம்பத்கரி ,அஸ்வாரூடா, தேவியருடன் ஸ்ரீ மத் லலிதாம்பிகை பண்டா சூரசம்ஹார நிகழ்ச்சியும் கண்ணாடி பிம்பத்தில் லலிதாம்பிகை சாந்தி திருமஞ்சனமும். தசமி திதியில் லலிதாம்பிகையின் ராஜ தர்பார் தரிசனம் மகாசங்கல்பம் சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி நடைபெறும். ஸ்ரீபாலா ஔஷத லலிதா ஆலயம்.🍀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *